Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொது அமைதியை பேணுவதற்கு ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!


பொது அமைதியை பேணுவதற்காக அனைத்து ஆயுதப்படைகளையும் அழைத்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் ஆரம்பமான நிலையில், இந்த விடயம் குறித்த ஜனாதிபதியின் மகஜரை சபாநாயகர் சமர்பித்தார்.

குறித்த மகஜரில் 40வது அதிகாரசபையின் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொது ஒழுங்கைப் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டு, அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அழைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் குறிப்பிட்ட சில பகுதிகளில் பொது ஒழுங்கை பராமரிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

No comments