கிளிநொச்சி தர்மபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்த 08 பேர் தமிழகம் இராமேஸ்வரம் பகுதியை சென்றடைந்துள்ளனர்.
தலைமன்னார் பகுதியில் இருந்து கடந்த திங்கட்கிழமை இரவு படகொன்றில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 1 ஆண், 5 பெண்கள், 1 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை உட்பட 08 பேர் சட்டவிரோதமான முறையில் தமிழகம் நோக்கி பயணித்துள்ளனர்.
அவர்களை ஏற்றி சென்ற படகு இராமேஸ்வரம் அருகில் மூன்றாம் மணல் திட்டில் அவர்களை இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. தமிழகத்திற்கு அழைத்து செல்வதற்காக குறித்த படகுக்கு ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.
மணல் திட்டில் மீட்கப்பட்டவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments