தனது வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நாயினை வெளியில் விட்ட , நாயின் உரிமையாளரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பருத்தித்துறை நகர்ப்புறத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர் பாதசாரிகளிற்கும் பாடசாலை மாணவர்களிற்கும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் வளர்ப்பு நாயினை தமது ஆதனத்தினுள் பராமரிக்காது பொதுப்போக்குவரத்து வீதியில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் வளர்ப்பதாக பருத்தித்துறை நகரசபையிற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
குறித்த முறைப்பாடு தொடர்பாக பரிசீலணை மேற்கொண்டு குறித்த எதிராளியிற்கு எதிராக பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஸ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கானது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நாயின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகி இருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் பின் கடுமையான எச்சரிக்கையுடன் உரிமையாளர் விடுவிக்கப்பட்டார்.







No comments