Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

காங்கேசன்துறையில் வீதியோர மரக்கறி வியாபாரத்திற்கு தடை - சந்தையில் வியாபாரத்தை முன்னெடுக்க அறிவுறுத்தல்


யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை பொது சந்தை மீண்டும் சொந்த இடத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது 

உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு கால பகுதியில் காங்கேசன்துறை பகுதி மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேறிய நிலையில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்காது உயர் பாதுகாப்பு வலயமாக குறித்த பிரதேசம் பிரகடனப்படுத்தப்பட்டது. 

பின்னரான கால பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட காங்கேசன்துறை பொது சந்தையை மீள சொந்த இடத்தில் இயங்க வைப்பதற்கான கட்டடங்கள் கட்டப்பட்டு , சந்தை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் , மக்கள் மரக்கறிகளை கொள்வனவு செய்ய வருகை தருவது குறைவாக இருந்தமையால் , வியாபாரிகள் மரக்கறி விற்பனையை கைவிட்ட நிலையில் , சந்தை கட்டடமும் மூடப்பட்டது. 

இந்நிலையில் , வலி. வடக்கு பிரதேச சபை மீள தெரிவான நிலையில் , சந்தையை இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் சொந்த இடத்தில் இயங்க செய்வது எனவும் , சந்தையை சூழவுள்ள பகுதிகளில் வீதியோர மரக்கறி விற்பனை , கடைகளில் மரக்கறி விற்பனையை இடைநிறுத்தி , சந்தையில் மாத்திரம் மரக்கறி விற்பனை மேற்கொள்ள வேண்டும் எனவும், சந்தை கட்டடத்தில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடுகளையும் விரைந்து ஏற்படுத்தி கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் விரைவில் சந்தை வியாபார நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் , சந்தையில் வியாபாரத்திற்கு இடம்பெற்ற ஒருவர் இன்றைய தினமே தனது வியாபர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 




No comments