Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

40 ஆண்டு கால அரச சேவையில் இருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகஸ்தர் - யாழ். மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு


40 ஆண்டு கால அரச சேவையிலிருந்து இளைப்பாறும் நிர்வாக உத்தியோகத்தர் ஆறுமுகம் சத்தியமூர்த்திக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் மற்றும் பிரியாவிடை நிகழ்வும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

1986 ஆம் ஆண்டு தொடக்கம் அரச சேவையில் இணைந்து, மாவட்டச் செயலகத்தில் பல்வேறு காலகட்டங்களில் கடமையாற்றியதுடன், இறுதியாக கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி தொடக்கம் நேற்றைய தினம் வரை நிர்வாக உத்தியோகத்தராக சிறப்பாக கடமையாற்றி தமது 40 வருட அரச சேவையிலிருந்து  ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டு, சத்தியமூர்த்தியின் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை தொடர்பான ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து நிர்வாக உத்தியோகத்தர் சத்தியமூர்த்திக்கும் அவர் பாரியாருக்கும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. 








No comments