இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலைக்குள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மோதலில் 2 கைதிகள் உயிரிழந்துள்ள நிலையில் 4 கைதிகள் காயமடைந்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் கைதிகளால் பதற்ற நிலை உருவான நிலையில் , மோதல்களும் இடம்பெற்றுள்ளன. அதில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , நால்வர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸாரினால் கண்ணீர்புகை பிரயோகம் நடத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.









No comments