Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஹஜ் விசாக்களை விற்பனை செய்ய இடமளிக்கோம்


புனித மக்காவிற்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என்று புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முரணாக யாரேனும் செயற்படுவார்களாயின் உடனடியாக அமைச்சுக்கு அறிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் முதன்முறையாக ஹஜ் விடயங்களை கவனிப்பதற்காக தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று புத்தசாசன கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர், விதுர விக்கிரமநாயக்கவினால்   திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  கடந்த காலங்களில், இலங்கைக்கு கிடைக்கும் விசாக்கள் பல இலட்சங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டன. அவ்வாறான மோசடிகளை தடுப்பதற்காகவே இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களுக்கு நியாயமான சேவைகளை வழங்குவதே தனது நோக்கம். இம்முறை இலங்கை முஸ்லிம்களுக்காக 3500 விசாக்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments