Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை


தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் ஆரம்பகட்ட விசாரணைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதன் காரணமாக விசாரணைகளுக்காக வேறொரு திகதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments