Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.கணவனை திருவலையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை


யாழ்ப்பாணத்தில் கணவனை திருவலையால் அடித்து கொலை செய்த மனைவிக்கு நீதிமன்று மரண தண்டனை விதித்துள்ளது. 

பூம்புகார் பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 21ஆம் திகதி குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். 

அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , கணவன் மின்விளக்கினை பொருத்தும் போது தவறி விழுந்து உயிரிழந்தார் என மனைவி தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , கணவனை மனைவி திருகுவளையால் அடித்து கொலை செய்துள்ளார் எனவும் , மனைவிக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தது என்பதனையும் பொலிஸார் கண்டறிந்து கொலையானவரின் மனைவி மற்றும் அவரது மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரையும் கைது செய்தனர்

அது தொடர்பிலான சுருக்க முறையற்ற வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்றதை தொடர்ந்து , வழக்கு கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரபப்டுத்தப்பட்ட நிலையில் , சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

யாழ். மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து வழக்கு தீர்ப்புக்காக இன்றைய தினம் புதன்கிழமைக்கு திகதியிடப்பட்ட நிலையில் வழக்கு மன்றில் அழைக்கப்பட்ட போது , எதிரிகளான கொலையானவரின் மனைவியை குற்றவாளியாக கண்ட மன்று அவருக்கு மரண தண்டனை விதித்தது. 

அதேவேளை கொலையானவரின் மனைவியுடன் தொடர்பில் இருந்தவர் என கைது செய்யப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கு தொடுநர் தரப்பினால் நிரூபிக்க முடியாதமையால் சந்தேகத்தின் பலனால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

No comments