கடவத்தை பகுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியின் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த பயிலுநர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை, எட்டி உதைத்து காயப்படுத்தி, அவரது கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநகபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மஹபாகே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவந்த சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள், கடந்த 25 ஆம் திகதி இரவு கடமைக்கான வரவுபதிவில் கையொப்பமிட்டு, பின்னர் சாதாரண உடையில் எவருக்கும் தெரிவிக்காமல் கடவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற இசை கச்சேரியை காண சென்றுள்ளார்.
அங்கு பாதுகாப்புக்காக பொலிஸ் சீருடையில் வந்த பியகம பொலிஸ்நிலையத்தின் பயிலுநர் பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை காயப்படுத்திவிட்டு கைபேசியை திருடிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட கான்ஸ்டபிள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் களனி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments