Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE
Sunday, June 1

Pages

Breaking News

தாடி வைத்த வாலிபர்களை முத்தமிட வேண்டாம்


ஆண்களின் தாடியில் பாக்டீரியாக்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக தாடி வைத்த ஆண்களை முத்தமிடும் போது  தேமல் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்தியாவில் உள்ள தோல் நோய் சிறப்பு டாக்டர் முனீப்ஷா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

குறித்த பதிவில் , 

தற்காலத்தில் இளைஞர்கள் பலரும் முகத்தில் தாடியுடன் சுற்றுவதையே விரும்புகிறார்கள். கல்லூரிக்கு செல்லும் போதும், ஏன் திருமணம் செய்து கொள்ளும்போது கூட அவர்கள் முகத்தில் தாடி இருப்பது பேஷனாகி விட்டது.

இப்படி தாடியுடன் இருக்கும் ஆண்களை தான் பிடித்திருப்பதாக பல நிகழ்ச்சிகளில் பெண்கள் கூறியுள்ளனர். 

  ஒரு பெண், தனது ஆண் நண்பரை முத்தமிட்ட பின்பு தனது கன்னத்தில் தேமல் ஏற்படுவதாக கூறியிருந்தார். அந்த ஆண் நண்பருக்கு முகத்தில் தாடி உள்ளது. அந்த தாடி காரணமாகவே அவருக்கு தேமல் ஏற்பட்டுள்ளது.

ஆண்கள் தமது தாடியை தினமும் சுத்தம் செய்வதில்லை. இதன் காரணமாகவும் பாதிப்பு ஏற்படும். எனவே தாடி வைத்த ஆண்களை முத்தமிடும் முன்பு பெண்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.