Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இரண்டாம் உலக யுத்தத்தால் துண்டிக்கப்பட்ட பர்மாவுடனான தமிழர்களுக்கான தொடர்பு




நன்றி :- தனசேகரன் (பர்மா நாட்டில் இருந்து)

பர்மாவுக்கும் தமிழர்களுக்குமான தொடர்புகள் பற்றி பேசும் போதும் நமது அனைவருக்கும் நினைவு வருவது, தாய் தமிழ்நாட்டுடனான தொடர்புகள் மட்டுமே..

இலங்கையை தாய் நாடாக கொண்ட இலங்கை தமிழர்களின் தொடர்புகள் பற்றி தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.. 

18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், முக்கியமாக இலங்கையில் தமிழர்கள் வாழும் வடபகுதியின் யாழ்பாணத்தில்  உள்ள "வல்வெட்டித்துறை" என்கிற அன்றைய துறைமுகத்திற்கும் பர்மாவின் "அரக்கன்" (Arakan, nowaday Rakhain State of Myanmar) பகுதியில் " அக்யாப்" (Akyab , nowaday Sitthwe port city) என்கிற துறைமுகம் நகரத்திற்கு இடையில் வணிக தொடர்புகள் நிறையவே இருந்தன.

மேலும் மற்றைய துறைமுகங்களான யாங்கோன் மற்றும் மவ்லமைன் துறைமுகங்களுடன் தொடர்புகள் இருந்தன

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் (jaffna) வடமராட்சி பகுதியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும். 

வல்வெட்டித்துறையில் மிக்க சிறப்போடு வாழ்ந்த ஒரு குடும்பம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையினதும் அவரது மூதாதையர்களினதும்  குடும்பமாகும். 

திருமேனியார் குடும்பம்` என்று தான் வேலுப்பிள்ளை அவர்களது மூதாதையர்கள் வழி வந்தவர்களை மரியாதையோடு அழைப்பார்கள் அந்த ஊர் மக்கள். 

வல்வெட்டித்துறையிலிருக்கும் புகழ் பெற்ற சிவன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் வேலுப்பிள்ளையின் தந்தை வழி வந்த குடும்பத்தினர்தான். 

அந்தக் கோயிலே பிரபாகரனின் முன்னோர்களால் தான் கட்டப்பட்டது. பிரபாகரனின் முன்னோர்களில் ஒருவரான ஐயம்பிள்ளை என்பவர் புகழ்பெற்ற வணிகராகத் திகழ்ந்தவர்.

டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற வணிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார்.

அவருடைய மகனான வேலாயுதம் என்பவரும் அதேபோல வாணிபத்தில் சிறந்து விளங்கியவர். அவரது பிள்ளையான வெங்கடாசலம் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வியாபாரமும், செல்வ வளமும் பல மடங்கு பெருகியது. 

அவர் சொந்தமாக பன்னிரண்டு கப்பல்களை வைத்து வாணிபம் செய்தவர். இந்தியா, பர்மா, மலேசியா முதலான நாடுகளுக்கு அவர் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய வணிகராகத் திகழ்ந்தார்.  

ஆரம்பத்தில் தென்கிழக்காசிய நாடான மலேசியாவின் துறைமுகநகரங்களான பினாங். போர்ட்வேலோ, பன்கூர், கிள்ளான் என்பவற்றுடன் அரிசி வர்த்தகத்தில் இவர் ஈடுபட்டார்.
 
             பன்னிரண்டு கப்பல்களிற்கு அதிபதியாக இருந்த வெங்கடாசலம் பிள்ளையவர்கள் 1852இல் பிரிட்டன் பர்மாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பர்மாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்திலும் கால்பதித்து வெற்றிக்கொடி நாட்டியவர்களில் இவரே முதன்மையானவர். 

இவரால் ‘கெச்சுக்கப்பல்கள்’ வல்வெட்டித்துறையில் கட்டப்படத் தொடங்கியதும் பர்மா வியாபாரம் மேலும் சூடுபிடித்தது. 

ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கடலோடிகளும் வியாபாரிகளும் பர்மாவில் தரித்திருந்து அரிசியையும் நெல்லையும் கொள்வனவு செய்வதினால் கப்பல்கள் அங்கிருந்து திரும்புவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்த்து செல்லும் கப்பல்களில் உடனடியாகவே பொதிகளை ஏற்றக் கூடியவாறு எம்மவர்கள் சிலரை பர்மாவிலேயே தங்கவைத்தார். 

இவர்கள் எப்பொழுதும் ‘மேலாளர்’களாக பர்மாவில் தங்கியிருந்து உற்பத்தியாளர்களிடமும் வியாபாரிகளிடமும் பேரம்பேசி குறைந்த விலைகளில் அரிசியை வாங்கி மூட்டைகளாக கட்டி தயாராக வைத்திருப்பர்.

 வல்வெட்டித் துறையில் இருந்து செல்லும் கப்பல்கள் உடனடியாக அவை களை ஏற்றிக்கொண்டு மீண்டும் வல்வெட்டித்துறைக்கு திரும்பி விடும். இவ்வாறு மேலாளர்களாக இவரால் அனுப்பப்பட்ட ஊழியர்கள் தங்குவதற்காக பர்மாவின்‘அரக்கனில்’ ( Arakan , nowaday Rakhain State of Myanmar) ஓர்இடத்தை வாங்கி மடம், கிணறு என்பவற்றுடன் அவ்விடத்தில்  ஒரு முருகன் கோவிலையும் இவர்கட்டினார்.

 1853 முதல் பர்மா வுடனான அரசி வர்த்தகத்தை இவர் ஆரம்பித்தது முதல் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பலரும் இவ்வியாபாரத்தில் குதித்தனர்.

 இவ்வாறாக வல்வெட்டித்துறைக் கடலோடிகளின் அதீததொடர்பினால் பர்மாவின் அரக்கன். இறங்கூன் மோல்மீன் போன்ற துறை முகங்களில் இருந்து வல்வெட்டித்துறைக்கு நேரடியாகவும. விரைவாகவும் வரும் கடற்பாதை ஒன்று அடையாளம் காணப் பட்டது. 

ஆரம்பத்தில் கோரமண்டலக்கரை என அழைக்கப்படும இந்தியாவின் கிழக்குக்கரை துறைமுகங்களை ஒட்டியே பர்மாவை வல்வெட்டித்துறைக் கப்பல்கள் சென்றடைந்தன. 

இப்புதிய கடற்பாதை இவரால் கண்டுபிடிக்கப்பட்டவுடன் வங்காளவிரிகுடாவின் 9364அடி ஆழமுள்ள இக்கடற் பகுதியை வல்வெட்டித்துறைக் கப்பல்கள் சர்வசாதாரணமாக ஊடறுத்து பயணம் செய்தன. 

பதினோராம் நூற்றாண்டில் இராஜேந்திர சோழனது காலத்தில் ‘சோழர்களின் ஏரி’ என வங்கக்கடல் வர்ணிக்கப்பட்டதுண்டு. அதனையும்விட அதிகமாகவே 19ம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியிலும் 20 நூற்றாண்டின் முன்னரைப்பகுதியிலும் வல்வெட்டித்துறை கப்பல்கள் வங்காள விரிகுடாவை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. 

இத்தகைய நிலைக்கு ஈழத்தமிழரின் ‘கடலாளுமையை’ வளர்த்த பெருமை ‘பெரியவர்’ வெங்கடாசலம்பிள்ளையையே சாரும்.


1850 ஆண்டுக்குப் பின் கட்டிய பெரும் கப்பல்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பர்மாவுக்கு சென்று அரிசி, தேக்கமரம் மற்றும் வியாபாரப் பொருட்களை ஏற்று இலங்கையில் உள்ள துறைமுகங்களிலும் இந்தியாவின் மேற்கு கரையில் உள்ள கொச்சின் ,பம்பாய் , கராச்சி போன்ற துறைமுகங்களும் இறங்கி பெரும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள்..

                   இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பொருளாதாரம் அழிக்கப்பட்டது, மேலும் இந்த வர்த்தக வழிகளும் மறைந்துவிட்டன..இலங்கை உறவுகளின் தொடர்புகளும் மறைக்கப்பட்டன.







No comments