Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

குருக்களுக்கு இடையில் முரண் ; தடைப்பட்ட நல்லூர் வீரமாகாளி அம்மன் கொடியேற்றம்


யாழ்ப்பாணம் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய மகோற்சவத்தினை உடன் ஆரம்பிக்குமாறு யாழ் மாவட்ட நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.

வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை காலை ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. 

இந் நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்றைய தினம் வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

நீன்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் கருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்யுமாறும் நீதிபதியினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனடிப்படையில் இன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

அதேவேளை ஆலய கொடியேற்ற உற்சவத்தினை காண இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வந்த பக்தர்கள் மூடப்பட்டிருந்த ஆலய வாயிலுக்கு அருகில் அமர்ந்திருந்து அம்மனை மனதில் வேண்டிக்கொண்டனர். 






No comments