அவிசாவளை, பதுவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , அவரது மகளும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர்களது வீட்டில் தங்கியிருந்த இளைஞனுக்கும் கொலையானவரின் மகளுக்கும் இடையில் காதல் உறவு இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குறித்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் யுவதியை தாக்கியுள்ளார்.
இதன்போது, குறுக்கிட்ட யுவதியின் தந்தையின் மீதும் அந்த இளைஞன் தாக்கியுள்ளார்.
அதில் 60 வயதான தந்தை சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய சந்தேக நபர் அவிசாவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.







No comments