Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

ஊர்காவற்துறை - காரைநகர் கடற்பாதை ஓட்டி போதையில் அட்டகாசம்


யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை - காரைநகருக்கு இடையில் , சேவையில் ஈடுபடும் கடற்பாதையின் ஓட்டி , மது போதையில் பாதையில் பயணித்தவர்களுடன் தகாத வார்த்தைகள் பேசி முரண்பட்டதுடன் , அரச உத்தியோகஸ்தர் ஒருவரையும் தாக்கியுள்ளார். 

வீடியோ :- https://youtube.com/shorts/COIVYnyUosk?feature=share

ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

கடல் பாதையில் கடமை நேரத்தில் நிறை போதையில் நின்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பாதை பணியாளர் மேலங்கி அணியாது, அரை நிர்வாணமாக மது போதையில் நின்று பயணத்தில் இருந்த அரச ஊழியர்கள் பொதுமக்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் அரச ஊழியர்களுடன் தகாத வார்த்தைகளால் முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் கொட்டனினால் ஊழியர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

இதன்போது பிரதேச செயலகம் மற்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் பெண்கள் உட்பட பலரும் பாதையில் பயணத்தில் ஈடுபட்டபோது குறித்த சம்பவம் இடம்பெற்றமை பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் ஊர்காவற்துறை பொலிஸார் ஆகியோருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

No comments