Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

"விலையுயர்ந்த விதைகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா.


நல்லூர் வடக்கு சந்திரசேகரப்பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த வே.முத்தையா அவர்களின் 100வது அகவை நிறைவு நாளை முன்னிட்டு கவிஞர் கெங்கா ஸ்ரான்லி அவர்களின் "விலையுயர்ந்த விதைகள்" எனும் கவிதைநூல் வெளியீட்டு விழா நேற்று மாலை நல்லூர்வடக்கு ஸ்ரீசந்திரசேகரப்பிள்ளையார் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

பேராசிரியர் முனைவர் சி.சிவலிங்காராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வெளியீட்டு உரையினை , கவிஞர்.ரஜிதா அரிச்சந்திரன் அவர்களும், மதிப்பீட்டுரையினை கவிஞர். வைவரவநாதன் வசீகரன் அவர்களும் நிகழ்த்தினர்.

ஓய்வு நிலை கிராம உத்தியோகத்தர் சதா கனகலிங்கம்  அவர்கள் வாழ்த்துரையினை நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வில் கெளரவ விருந்தினராக வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களும், சட்டத்தரணி சுதா கஜேந்திரகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டதுடன் நூலின் முதல் பிரதியை லயன் குமாரசாமி ஜெயந்தன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வின் நிறைவில் நூலாசிரியர் கெங்கா ஸ்டான்லி ஊர் மக்களினால் கௌரவிக்கப்பட்டார்.

இன் நிகழ்வில் பெருமளவிலான மக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்






No comments