மாத்தறை திஹாகொட பண்டத்தர வேல்ல பகுதியில் ஒரு தொகை ஆயுதத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த இடத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்றும் , மெகசீன் ஒன்றும், T56 ரக 10 தோட்டாக்கள் உள்ளிட்ட மேலும் சில தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மாத்தறை குற்றப்பிரிவு மற்றும் மாத்தறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments