Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தாய் மற்றும் பெண் குழந்தை இரட்டைக் கொலை : சந்தேக நபர் கைது!


அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாதப் பெண் குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் கணவரின் நெருங்கிய உறவினர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் வரகாகொட சல்காஸ் மாவத்தை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று காலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு அரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபரைப் பொலிஸார் கைது செய்ய முயற்சித்தபோது கூரான ஆயுதத்தால் பொலிஸ் பொறுப்பதிகாரியை பல தடவைகள் தாக்க முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது முயற்சி தோல்வியடைந்தமையால் அவர் தனது மார்பில் பல தடவைகள் கத்தியால் குத்திக் காயமேற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அகுருவாதோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments