Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

“நட்பு மண்” எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி சேந்தாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது.


யாழ் எய்ட் நிறுவனத்தினரால் இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் நிறுவப்பட்ட நட்பு மண் எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அமரர் சண்முகநாதன் தேசிகனின் ஞாபகார்த்தமாக அன்னாரின் சகோதரனும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 1995ம் ஆண்டு மாணவனுமான சண்முகநாதன் குருபரனின் நிதி அனுசரணையுடன் குறித்த மாதிரி பண்ணை உருவாக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சண்முகநாதன் குருபரனின் உறவினர்கள், யாழ் எய்ட் உத்தியோகத்தர்கள், தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

சிறுவர்கள் மகிழ்ச்சியாக தமது பொழுதுபோக்கை கழிக்கும் வகையில் குறித்த மாதிரி பண்ணையில் பல விடயங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்பதிவு செய்து கொண்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு மாத்திரமே குறித்த மாதிரி பண்ணை முதல்கட்டமாக பார்வையிட அனுமதிக்கப்படவுள்ளதுடன் ஆரம்ப கட்டமாக கட்டணமின்றியும் பின்னர் கட்டணத்துடனும் பண்ணையை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.





No comments