Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கதின் நினைவஞ்சலி


மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கதின்  நினைவஞ்சலிக் கூட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

Follow us via Whats App https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களது இளநிலை சட்டத்தரணிகளினால் குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதன்போது சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி உரையாற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன, தவத்திரு வேலன் சுவாமிகள், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடக்கு வலய முன்னாள் உப தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், ஜூன் 19ஆம் திகதி தனது 77ஆவது வயதில் காலமானார்.











No comments