யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தர் ஊரவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் .
Follow us via Whats App https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN
சங்குவேலி பகுதியை சேர்ந்த ஜெகதாஸ் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த குறித்த காதலர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது ஊரை விட்டு வெளியேறி இருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால் , இருவரும் ஊர் திரும்பியுள்ளனர்.
அவ்வேளை ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.அதனால் அவர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , இடையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
No comments