Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். புகையிரத பாதையில் படுத்திருந்து பாடல் கேட்டவரின் கை கால்கள் துண்டிப்பு


யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார் 

இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக புகையிரத பாதையில் "ஹெட் செட்" அணிந்து பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருந்த வேளை புகையிரதம் மோதியுள்ளது. 

அதில் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரை அங்கிருந்து மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments