கொழும்பு – கொலன்னாவை பிரதேசத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
Follow us via Whats App https://chat.whatsapp.com/H2g8RmUpm8xDqiZJH11jfN
பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை அழுத்த மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோதே மின்சாரம் தாக்கிக் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் சுரேந்திரன் கவிதா (வயது 15) என்ற மாணவியை உயிரிழந்துள்ளார்.
மாணவியின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments