Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வவுனியா இரட்டை படுகொலை ; கூலிபடையை ஏவிய கொலை


வவுனியா இரட்டை கொலை கூலிப்படையினால் மேற்கொள்ளப்பட்டது என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

வவுனியா தோணிக்கல் பகுதியில் கடந்த 23ஆம் திகதி வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று ,  குழந்தைகள் , சிறுவர்கள் , பெண்கள் உள்ளிட்ட 10 பேர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொண்டு வீட்டுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. 

சம்பவத்தில் குடும்ப பெண்ணொருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில் , அவரது கணவர் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருந்தார். ஏனைய 08 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிஸார் 05 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் , 03 மோட்டார் சைக்கிள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மீட்டு இருந்தனர். 

கைது செய்யப்பட்ட நபர்களை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வவுனியா நீதவான் முன்னிலையில் முற்படுத்தி . சந்தேகநபர்களை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய பொலிஸார் நீதவானிடம் அனுமதி கோரினர். பொலிசாரின் கோரிக்கைக்கு நீதவான் அனுமதித்தார். 

அதன் அடிப்படையில் சந்தேக நபரை பொலிஸார் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்து வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட நபருக்கும், வேறு ஒரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அந்நபர் கூலிப்படையை ஏவி படுகொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments