முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா தடைகள், அச்சுறுத்தல்களை தாண்டி சிறப்பாக இடம்பெற்றது.
குருந்தூர் மலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் சுமார் ஐந்து பேருந்துகளில் நூற்றுக்கணக்கான பெரும்பான்மையின் மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில், ஈடுபட்டனர்.
பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆலய சூழலில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
No comments