திருகோணமலை விமானப்படையின் விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமான படையினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயிற்சி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்தார்.
சீனக்குடாவில் உள்ள பறக்கும் பயிற்சி பிரிவில் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் PT-6 விமானம் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை வான் சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போதே குறித்த விபத்து ஏற்பட்டது.
இந்த விமானம் காலை 11:25 மணிக்கு புறப்பட்டு 11:27 மணிக்கு சீனக்குடா இலங்கை விமானப்படை நிலையத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்து தொடர்பில் உடனடி விசாரணைக்கு இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments