Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

நல்லூர் நடைமுறைகளை மீறிய பொலிஸ்மா அதிபரின் சகோதரர் ?


பொலிஸ்மா அதிபரின் சகோதரர் என கூறப்படும் நபர் ஒருவர் நல்லூர் ஆலய விதிமுறைகளை மீறி ஆலய வாசலில் காரில் சென்றமையால் ஆலய சூழலில் பரபரப்பு ஏற்பட்டது. 

நல்லூர் ஆலய வருடாந்திர மாகோற்சவம் நடைபெற்று வரும் இக்கால பகுதியில் , ஆலய சூழலை சுற்றியுள்ள வீதிகளில் வீதி தடைகள் போடப்பட்டு , வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆலயத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழிப்பாட்டிற்கு காரில் சென்ற நபர் ஒருவர் , வீதி தடைகளை மீறி ஆலய வாசல் பகுதிக்கு காரில் சென்று இறங்கி சென்றுள்ளார். 

குறித்த காரினை மாநகர சபை உறுப்பினர்கள் மறித்த போதிலும் , பொலிஸார் தமது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து , மாநகர சபை ஊழியர்களையும் மீறி காரை வீதி தடைகளை தாண்டி செல்ல அனுமதித்தனர். 

குறித்த கார் யாருடையது ? எதற்காக உள்ளே அனுமதித்தீர்கள் என மாநகர சபை ஊழியர்கள் பொலிசாரிடம் கேட்ட போது , அவர் பொலிஸ் மா அதிபரின் சகோதரர். அவரை மறிக்க எமக்கு உரிமை இல்லை. என கூறியுள்ளனர். 

குறித்த நபர் தனது ஆலய வழிப்பாட்டை முடித்துக்கொண்டு  ஆலய வாசலில் நிறுத்தப்பட்ட காரை எடுத்து சென்றார். 

ஆலய வீதியில் பக்தர்கள் பிரதட்டை அடிக்கும் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தமையை ஏற்க முடியாது எனவும் , நடைமுறைகளை மீறி , அதிகார துஸ்பிரயோகங்களில் ஈடுபட்ட பொலிசாரின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அங்கிருந்த பக்தர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.  



No comments