புத்தளம் பெட்டிகம பகுதியில் மான்களை வேட்டையாடிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாவெவ வென்னப்புவ பகுதிகளிலுள்ள பல ஹோட்டல்களுக்கு அதிக விலைகளில் மான் இறைச்சியை விற்பனை செய்யும் நோக்கில் அவை வேட்டையாடப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களினால் ஆனமடுவ வனப்பகுதியில் நேற்று சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மான்களை வேட்டையாட வந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் மஹகும்புக்கடவல, ரத்மல்கஹவெவ, தொடுவாய் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து கெப் வாகனம் மற்றும் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலதிக விசாரனைகளை புத்தளம் வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்
No comments