நல்லூரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. மாம்பழ திருவிழா வீடியோ
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மாம்பழ திருவிழா நடைபெற்றது.
சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நாரதர் மாம்பழமொன்றை வழங்கினார்.
அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க, முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் பிள்ளையாருக்கும், முருகனுக்கும் கூறினர்.
உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றிவர சென்றபோது, பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றிவந்து நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.
உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை உடை அனைத்தையும் துறந்த முருகன், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் போய் அமர்ந்தார்.
இந்த புராண கதையை மையமாக வைத்தே மாம்பழ திருவிழா நடைபெறும். அந்நிலையில் இன்றைய தினம் மாம்பழ திருவிழாவின் போது , குழந்தை ஒன்றினை பெற்றோர் பழனியாண்டவர் கோலத்தில் உடுப்பு உடுத்தி ஆலயத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.
அந்த குழந்தை பலரின் கவனத்தை ஈர்த்து இருந்தது.



.jpg)

.jpg)
.jpg)
.jpg)


No comments