கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் இருந்து பயணித்த இளைஞர் ஒருவர் ஹொரபே ரயில் நிலையத்தின் கூரையில் மோதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு ரயில் லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் நேற்று (11) நள்ளிரவு முதல் பல ரயில் நிலையங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை இயக்கப்படவிருந்த சுமார் 20 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் பயணிகள் ரயில் சேவைகள் குறைந்த நெருக்கடியில் நெரிசலால் ரயிலின் கூரையில் இருந்து பயணிக்க மேற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது.
No comments