மஹியங்கனை பெரஹராவில் பங்கேற்க வந்த 'சீதா' எனும் யானை மீது வனவிலங்கு அதிகாரி ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
காட்டு யானை என நினைத்து வனவிலங்கு அதிகாரி சீதாவை சுட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யானைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments