ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நியூயோர்க்கில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்டை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வைத்து பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்தை ஜனாதிபதி சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கும் பொதுநலவாய செயலகத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட்டுள்ளன.
மேலும் கடந்த ஆண்டு ருவாண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது தலைவர்கள் எடுத்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் அவர்கள் ஆராய்ந்தனர்.
No comments