ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கும் இடையில் சந்திப்பு இடமபெற்றுள்ளது.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் ஓர் அங்கமாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் முக்கிய பொருளாதார பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது நிதித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
No comments