அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இஹல தல்துவ-குருபஸ்கொட பகுதியில், நேற்றைய தினம் புதன்கிழமை இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், காயமடைந்த இருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
No comments