Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பாடசாலை மாணவர் மத்தியில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு.


வடமாகாணத்தில் உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் கல்வித்திணைக்களம், சுகாதாரத்திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் என்பவற்றின் வழிகாட்டலுடன் பாடசாலைகளில் முயற்சியாண்மையுடன் கூடிய பாடசாலைத் தோட்ட வேலைத் திட்டமோன்று கடந்த ஏழு மாதங்களாக நடைமமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஓரங்கமாகப் பாடசாலை மாணவர் மத்தியில் சேதன வீட்டுத் தோட்ட செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் பல்வேறு இயற்கை விவசாய செயற்பாட்டு உத்திகளை விவசாயப் போதனாசிரியர்கள் மாணவர் மத்தியில் வழங்கிவருகின்றனர்.

அந்நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை சண்டிலிப்பாய்  கமநல சேவைப் பிரிவிற்குட்பட்ட விவசாயப் போதனாசிரியர்களான தி.துர்காயினி, தே.மதுரா ஆகியோர் இயற்கை நாசினிப் பயன்பாடு, மண்புழு திரவ உர உற்பத்தி, காலத்தை அனுசரித்து செயற்படும் விவசாய உத்திகள் என்பவற்றைப் பற்றி செயல் முறையுடன் கூடிய செயல் விளக்கங்களை  பண்டத்தரிப்பு ஜெசிந்தா றோ.க.த க.பாடசாலையில் சிறப்பான முறையில் மேற்கொண்டனர்.

மாணவர் ஆர்வத்துடன்  இச் செயல் விளக்கங்களை அவதானித்தும், செயற்பாட்டில் ஈடுபட்டும் பயன்பெற்றதை அவதானிக்க முடிந்தது.

இக்கலந்துரையாடலில் வலிகாமம் கல்விவலயத்தைச் சேர்ந்த விவசாய பாட ஆசிரிய ஆலோசகர் ப.அருந்தவம் மற்றும் தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை நிகழ்ச்சித்திட்ட வளவாளர் எஸ்.சிவகரன் என்போரும் கலந்து கொண்டனர்.







No comments