கூகுள் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகின்றது.
கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்ட செர்ஜி பிரின் மற்றும் லொரி பேஜ் ஆகியோர் உலகளாவிய தேடுத் தளமொன்றை ஆரம்பிக்கும் நோக்கில், தமது அறையிலிருந்தவாறே முயற்சித்துள்ளனர்.
இந்த முயற்சியானது, கூகுள் தேடுத்தளம் ஆரம்பிக்க வழிவகுத்துள்ளது.
1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி கூகுள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இது குறுகிய காலத்திலேயே, கணினி உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
இன்று கூகுள் இல்லாமல் பயணிப்பது மிகவும் சிரமம் என்ற இடத்திற்கு உலகம் நகர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கூகுள் என்ற பெயருக்கு கீழ், இன்று உலகமே அடங்கியுள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.
No comments