பாகிஸ்தானில் தென்மேற்கு மாகாணத்தில் பலூசிஸ்தானின் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அருகில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 50 போ் உயிரிழந்த நிலையில் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
மஸ்துங் நகரில் நடைபெற்ற மத வழிபாட்டை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என அந்நாட்டின் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
No comments