Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். கோடி ரூபா பெறுமதியான 7 மோட்டார் சைக்கிள் கைப்பற்றல்!


சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான 07 மோட்டார் சைக்கிளை யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த மோட்டார் சைக்கிளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியை அண்மித்த பகுதியில், மர விற்பனை நடாத்தும் நபர் ஒருவரின் விற்பனை நிலையத்தினுள் , அதீத திறன் (CC) கொண்ட மோட்டார் சைக்கிள்கள் நிற்பதாக மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் பிரகாரம் நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு , சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது , அதனுள் இருந்து 07 அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் கைப்பற்றினர். 

அவற்றில் நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு எவ்வித பதிவுகளும் இல்லாத நிலையில் , ஏனைய மூன்று மோட்டார் சைக்கிள்களுக்கும் போலி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. 

அதனை அடுத்து 07 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றிய பொலிஸார் , அவற்றை உடைமையில் வைத்திருந்த நபரையும் கைது செய்து , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக , கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர் 

கைது செய்யப்பட்ட நபர் வெளிநாடொன்றில் இருந்து திரும்பி வந்தவர் எனவும் , அத்துடன் அதிக பணத்தினை நாட்டிற்குள் கொண்டு வந்து பல்வேறு வியாபாரங்களை முன்னெடுப்பவர் என்றும் , பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவினையும் பேணி வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

No comments