Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புதிதாக கொள்வனவு செய்யும் மோட்டார் சைக்கிளை யாழில்.பதிவு செய்யலாம்


யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வதற்கான சேவை, நாளைய தினம் திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இச்சேவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள கருமபீடத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.

இதுவரை கொழும்பிலுள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவுகளை, நாளைய தினம் திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களப் பிரிவில் மேற்கொள்ள முடியும்.

இச்சேவையின் ஆரம்ப நிகழ்வு நாளைய தினம் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு   உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன் மூலம், புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்வதற்காகக் கொழும்புக்குச் செல்ல வேண்டிய சிரமம் குறைக்கப்படுவதுடன், யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கு இச்சேவையை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

No comments