ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெர்லின் உலகளாவிய மாநாட்டில் பங்கேற்பதற்காக அடுத்த வாரம் ஜேர்மன் பயணிக்கவுள்ளார்
இந்த மாநாட்டில் ஜனாதிபதி முதல் நாளில் உரையாற்றவுள்ளதுடன், ஜேர்மனியின் அரச தலைவர், பிற அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களுடனான சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த ஜேர்மனிக்கான இரண்டு நாள் விஜயத்தில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் நிதியமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல் ஆகியோர் ஜேர்மன் அரசாங்க பிரதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments