அண்மையில் ஜோர்தானின் எல்லை வழியாக இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரு இலங்கைப் பெண்களை இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
50 மற்றும் 44 வயதான பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் ஜோர்தானுக்கே திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், இப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
No comments