யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து பெறுமதியான இரு கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் ஆட்கள் அற்ற வேளை வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் , வீட்டில் இருந்த இரு பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments