Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யாழ் கானம் இசை நிகழ்வில் கலந்து கொண்டோர் செய்த செயல் - வீடியோ இணைப்பு


யாழில் இடம்பெற்ற இசை நிகழ்வுக்கு சென்றவர்கள் மைதானத்தில் வீசி சென்ற கழிவுகளை தூய்மை பணியாளர்கள் தமது கைகளால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்வு இடம்பெற்றது. அதற்கு வந்த ரசிகர்கள் உணவு பொருட்கள் , போத்தல்கள் என கழிவுகளை பொறுப்பற்ற வகையில் மைதானத்தில் வீசி சென்று இருந்தனர். 

மறுநாள் , யாழ்.மாநகர சபை தூய்மை பணியாளர்கள் மைதானத்தில் வீசி செல்லப்பட்ட கழிவுகளை தமது கைகளால் அப்புறப்படுத்தி மைதானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

நிகழ்வுகளுக்கு செல்வோர் கழிவு பொருட்களை அதற்குரிய இடங்களில் வீசினால் , அவற்றை அப்புறப்படுத்துவது இலகுவானது. இவ்வாறு எல்லா இடங்களிலும் கழிவுகளை வீசி செல்வதனால் அவற்றை அப்புறப்படுத்து எமக்கு கடினமாக உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் கழிவுகளை கழிவு தொட்டிகளில் வீசுங்கள் என தூய்மை பணியாளர்கள் கோரியுள்ளனர் . 




No comments