யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி துண்ணாலை பகுதியில், நெல்லியடி பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பாட்டார்.
யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் குறித்த நபருக்கு தொடர்பு இருப்பதாவும், வவுனியாவை சேர்ந்த நபர் நீண்ட காலமாக துண்ணாலை பகுதியில் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை அல்வாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நெல்லியடி பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய ஒருவரை கைது செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments