சீவல் தொழில் செய்வதற்காக தென்னைமரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியை சேர்ந்த பொன்னுத்துரை கணேசலிங்கம் (வயது 64) எனும் தொழிலாளியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 06ஆம் திகதி தவறி விழுந்த நிலையில், யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
No comments