முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் இரண்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கேப்பாபிலவு பகுதியில் உள்ள வீடொன்றில் சோதனை நடத்தினர்.
அதன் போது வீட்டில் இருந்து உள்நாட்டு தயாரிப்பான இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. அதனை அடுத்து வீட்டு உரிமையாளரை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்
No comments