Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடக்கில் பணியாற்றும் தெற்கை சேர்ந்த அரச ஊழியர்களுக்கு விரைவில் இடமாற்றம்


தெற்கில் இருந்து வேலை வாய்ப்பு பெற்று வடமாகாணத்திற்கு வருவோர் , மொழி பிரச்சனை , தங்குமிட பிரச்சனை , உணவு என பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வருவதால் அவர்களை சொந்த மாகாணத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ்  தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தொடர்பாக கேட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இவை தொடர்பில் பிரதமரோடு கலந்துரையாடி இருந்தேன். வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்கள் தமிழ் பேசுகின்ற மக்கள். தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற போது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. அது உடனடியாக களையப்பட வேண்டும் என்று சொல்லி இருந்தேன் இதற்கு முன்னர் அமைச்சரவையிலும் அவரோடு கலந்துரையாடி இருக்கின்றேன்.

ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் தென்னிலங்கையில் இருந்து நியமிக்கப்பட்டு இங்கு வருவதாக அறிந்து அதனை உடனடியாக நிறுத்துமாறும், இங்கிருக்கின்றவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று சொல்லிய போது அவர் ஏற்றுக் கொண்டிருக்கின்றார். அடுத்த அடுத்த கிழமைகளில் இவை நடைமுறைக்கு வரும்.

தற்போது வந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கு இங்கு மொழிப் பிரச்சனை, தங்குமிட, உணவு பிரச்சினைகள் இருக்கின்றது, இதனால் அதற்கே அவர்கள் உழைப்பது செலவுக்கே போய்விடும்.

இது ஒரு அறியாமையில் செய்யப்பட்ட விடயமா அல்லது உள்நோக்கத்தோடு செய்யப்பட்ட விடயமா என்பது தெரியவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் இதற்கு இடம் கொடுக்க மாட்டேன்.

கடந்த காலத்தில் நல்லாட்சி என்ற பெயரில் இங்கு நடந்தது போன்று நான் இங்கு நடக்க விட மாட்டேன் என மேலும் தெரிவித்தார். 

No comments