தமிழ்தேசிய கட்சிகளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாகாணங்களில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பொதுமக்களின் ஆதரவு கோரி துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
மானிப்பாய், சங்கானை பிரதேசங்களின் சந்தைகள், கடைகளில் இன்றைய தினம் வியாழக்கிழமை விளக்க துண்டுபிரசுர விநியோகம் செய்யப்பட்டது.
அதன்போது, புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்தன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், மானிப்பாய் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்களான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ மற்றும் லோ. ரமணன், யாழ்மாநகரசபை முன்னாள் உறுப்பினர் ப.தர்சானந், வலிவடக்கு பிரதேசசபை முன்னாள் உறுப்பினர். மா.கலையமுதன், வலிமேற்கு பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் கு.குணசிறீ மற்றும் புளொட் அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினர் ந.கணேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.
No comments