கலகெதர நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் ஒருவர், நீதிமன்ற தடுப்புக்காவல் அறையில் இருந்து வெளியே வந்து இளம் பெண் சட்டத்தரணி ஒருவரை கட்டி அணைத்து உள்ளார்.
சந்தேக நபரின் மூர்க்கத்தனமாக அணைப்பினால் பெண் சட்டத்தரணியின் கழுத்து நெரிபட்டு, பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
லகெதர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், கலகெதர நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.விசாரணையின் பின்னர் சந்தேநபரை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனை அடுத்து, சந்தேகநபர் நீதிமன்ற தடுப்பு காவல் அறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.
இதன்போது மற்றொரு சந்தேக நபர் ஒருவரை வழக்கு விசாரணைக்காக, தடுப்பு காவல் அறையில் இருந்து வெளியே அழைக்கப்பட்ட போது, குறித்த நபர், இரும்புக் கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே பாய்ந்து பெண் சட்டத்தரணி ஒருவரை, மூர்க்கத்தனமான கட்டியணைத்ததால், காயமடைந்த சட்டத்தரணி கலகெதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்தரணியின் அழகில் மயங்கியே , அவரை கட்டியணைத்ததாகவும், சற்றே ஆவேசமாக அணைத்து விட்டதால் சட்டத்தரணியின் கழுத்து நெரிக்கப்பட்டு விட்டதாகவும் மன்றில் கூறினார்.
அதனை அடுத்து , நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்ட நீதவான் , சட்டத்தரணியை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
No comments