Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு


அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

சங்கத்தின் வருடாந்த பொது கூட்டமும், புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அதன் போது இடம்பெற்ற நிர்வாக தெரிவின் போது, தலைவராக, வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி பா. தினகரன் தெரிவானார்.

தொடர்ந்து, செயலாளராக  ச.முகுந்தனும்(பிரதி அதிபர்) பொருளாளராக சு.பிரதீபனும் (மருந்து கலவையாளர்), உப தலைவராக ம. கபிலனும் (திட்ட முகாமையாளர்), உப செயலாளராக வி. சாந்தினியும் (ஆசிரியர்) தெரிவு செய்யப்பட்டனர்.

நவக்கிரி ஜே/275, ஆவரங்கால் மேற்கு ஜே/277, பத்தமேனி ஜே/281, தம்பாலை - கதிரிப்பாய் ஜே/282, இடைக்காடு ஜே/283,வளலாய் ஜே/284, அச்சுவேலி வடக்கு ஜே/285, அச்சுவேலி தெற்கு ஜே/286, அச்சுவேலி மேற்கு ஜே/287 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த பிரதிநிதிகள் நிர்வாக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேலும் அச்சுவேலி மினிபஸ் சங்கம், அச்சுவேலி முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம், கத்தோலிக்க ஒன்றியம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் நிர்வாக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

No comments